அறம் அறக்கட்டளையின் முயற்சியால்,கொடுமுடி வட்டம், வள்ளிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் 211 மூலம் பள்ளி கட்டிடம் புனரமைக்கப்பட்டு, நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சி.சரஸ்வதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் ஏரியா 7 சேர்மன் விஷ்ணு பிரபாகர் அவர்கள், அறம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர். ஷிவ்குமார் சின்னுசாமி அவர்கள், ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் 211 தலைவர் செல்வகுமார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


