[give_form id="1787"]
Follow us

மொடக்குறிச்சி ஒன்றியத்தில், இலவச மருத்துவ முகாம்.

மொடக்குறிச்சி ஒன்றியத்தில், இலவச மருத்துவ முகாம்.

நமது அறம் அறக்கட்டளை, சி.கே. மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிட்டல், தி வாசன் ஐ கேர் மற்றும் ஸ்கந்தன் பல் மருத்துவமனை இணைந்து மொடக்குறிச்சி ஒன்றியம், அவல்பூந்துறை பேரூராட்சி சுற்றுவட்டார மக்களுக்காக நடத்தப்பட்ட மாபெரும் இலவச பொது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் அவல்பூந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இம்முகாமில் நானும், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அறம் அறக்கட்டளையின் செயல் தலைவருமான டாக்டர் சி.சரஸ்வதிஅவர்களும் கலந்து கொண்டு மருத்துவ முகாமை பார்வையிட்டோம். மருத்துவ ஆலோசனை பெற்றவர்களுக்கு கட்டணம் இல்லாமல் சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்த பரிசோதனையும், மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர்.