நமது அறம் அறக்கட்டளை மற்றும் ரோட்டரி ஈரோடு திண்டல் சார்பில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் பொது மருத்துவம், கண் மருத்துவம், பல் மற்றும் தோல் மருத்துவம் சம்பந்தமான பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் முகாமில் இலவச இதய ஸ்கேன், சர்க்கரை அளவு மற்றும் இசிஜி எடுக்கப்பட்டது. இம் முகாமில் நான் கலந்து கொண்டு சிறப்பித்தேன். இம்மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனையும், பரிசோதனைகளும் செய்து கொண்டனர். மேலும் இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது.




