நமது அறம் அறக்கட்டளையில் மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் எண்ணத்தில் பல பயிற்சிகள் அளித்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக பெண்களுக்கு மாடித்தோட்டம் அமைப்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியை நான் துவக்கிவைக்க மொடக்குறிச்சி தோட்டக்கலை அலுவலர் முனைவர்.திரு.வெற்றிவேல் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு மாடித்தோட்டம் அமைப்பதற்கான பயிற்சிகளை அளித்தார்.







