அறம் அறக்கட்டளையின் சார்பில், மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பெண்களுக்கான ஒரு நாள் புத்துணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை நான் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தேன். இதனைத் தொடர்ந்து மனநல தன்னம்பிக்கை பயிலரங்கம், சமையல் மற்றும் பேக்கிங் தொழில்நுட்பங்கள், புகைப்பட தொழில் நுட்பங்கள், கைவினைப் நுட்பங்கள், விளையாட்டு போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சுமார் 150 பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.