அறம் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான சுயதொழில் திறன் வளர்ச்சிக்கான பயிற்சி நடைபெற்றது. நிகழ்வில் சுய தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதல் மற்றும் வங்கி கடன் பெறுதலுக்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. நிகழ்வில் நானும், அவல் பூந்துறை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர் திருமதி.உமா மகேஸ்வரி அவர்களும், மத்திய ரிசர்வ் வங்கியின் Dhan அமைப்பின் அலுவலர் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் அலுவலர்களும் மற்றும் கூடலூர் அரசு கலைக் கல்லூரியின் பேராசிரியர் அவர்களும் கலந்து கொண்டு பெண்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினோம்.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.மேலும் அவர்கள் சுயதொழில் தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்த தொடர்ந்து அறம் அறக்கட்டளை சார்பாக வழிகாட்டுதல் வழங்கப்படும்.






