கொடுமுடி வட்டம், வள்ளிபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பழுதடைந்த வகுப்பறைகளை மறுசீரமைப்பு செய்யக் கோரி ஊர் பொதுமக்கள் மற்றும் தலைமை ஆசிரியர் சார்பாக அளிக்கப்பட்ட மனுவிற்கு, நமது சட்டமன்ற உறுப்பினரின் அறம் அறக்கட்டளை முயற்சியினால், தன்னார்வல தொண்டு நிறுவனமான ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் – 211 சார்பாக கட்டப்பட உள்ள 4 லட்சம் மதிப்பிலான வகுப்பறை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டும் பூமிபூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டார்.
