நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்களுக்கு வந்த மனு அடிப்படையில், புதுவலசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஷிவ்குமார் அவர்களின் முயற்சியால் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் மூலம் மாணவ மாணவியர்களுக்கு கழிவறை கட்டும் பணி இன்று பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.