அறம் அறக்கட்டளை, ஒளிரும் ஈரோடு Olirum Erodu , ஈரோடு ஸ்பைஸ் ரவுண்டு டேபிள் 211 ROUND TABLE INDIA..Erode Spice Round Table-211 சார்பாக இலவச மரக்கன்றுகள் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது . மேலும் ஒவ்வொரு குழந்தைகளும் தங்களுக்கும்,தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் அவரவர் தேவைக்கேற்ப மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் 45 குழந்தைகள் தங்களுக்கு தேவையான 1500 மரக்கன்றுகளை பெற்றுக் கொண்டனர். நிகழ்வில் மரக்கன்றுகளை குழந்தைகளுக்கு வழங்கி மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தேன். நிகழ்வில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர் பெருமக்கள் உடன் இருந்தனர்.







