ஓடாநிலை, வெட்டுக்காட்டுவலசு அரசு நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர், கட்டிடம் பழுது பார்த்தல், வர்ணம் பூசுதல், கழிவறை மற்றும் டைல்ஸ் தளம் அமைத்து தருமாறு நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்களிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்திருந்த மனுவின் அடிப்படையில், நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் அறம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஷிவ்குமார் சின்னுசாமி அவர்கள், நேரில் ஆய்வு செய்து, விரைவில் இப்பணிகளை செய்து தருவதாக தெரிவித்தார்.