நமது அறம் அறக்கட்டளையின் சார்பில் 46 புதூர் பச்சப்பாளி பகுதியில் இலவச பொது மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகாம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது. முகாமில் பொது மருத்துவம் சம்பந்தமான பரிசோதனைகள் மற்றும் கண் சம்பந்தமான பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் முகாமில் இலவச சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு கண்டறியப்பட்டது. இம் முகாமில் நான் கலந்து கொண்டு சிறப்பித்தேன். இம்மருத்துவ முகாமில் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனையும், பரிசோதனைகளும் செய்து கொண்டனர்.மேலும் இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது.


