ஈரோடு அறம் அறக்கட்டளையின் விதை அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கான பொது மருத்துவம் மற்றும் சுகாதார பராமரிப்பு முகாம் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமில் ஈரோடு CK மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சி.கே.சரஸ்வதி அவர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம் , சர்க்கரை மற்றும் மகளிர் சம்மந்தமான பொது மருத்துவ பரிசோதனைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.