நமது அறம் அறக்கட்டளையின் சார்பில் குளூர் செங்கரைப்பாளையத்தில் இலவச பொது மருத்துவ முகாம்,சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் மற்றும் அச்சுதா கண் பரிசோதனை மையத்துடன் இணைந்து கண் பரிசோதனை முகாமும் நடைபெற்றது. முகாமில் பொது மருத்துவம் சம்பந்தமான பரிசோதனைகள் மற்றும் கண் சம்பந்தமான பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் முகாமில் இலவச சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு கண்டறியப்பட்டது. இம்மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனையும், பரிசோதனைகளும் செய்து கொண்டனர்.மேலும் இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது.