[give_form id="1787"]
Follow us

இலவச பொது மருத்துவம், மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம்.

இலவச பொது மருத்துவம், மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம்.

நமது அறம் அறக்கட்டளை, சி.கே. மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிட்டல் மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து மொடக்குறிச்சி ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி சுற்றுவட்டார மக்களுக்காக நடத்தப்பட்ட மாபெரும் எலும்பு முறிவு, தண்டுவட சிகிச்சை, இலவச பொது மருத்துவம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமில் நானும், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அறம் அறக்கட்டளையின் இணை தலைவருமான டாக்டர் சி.சரஸ்வதி அவர்களும் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தோம்.

சி.கே. மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் டாக்டர்.தினேஷ் (எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர்) முகாமிற்கு வந்திருந்த மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்கள். முகாமில் கலந்த கொண்டவர்களுக்கு எக்ஸ்ரே இலவசமாக எடுக்கப்பட்டது. மருத்துவ ஆலோசனை பெற்றவர்களுக்கு கட்டணம் இல்லாமல் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர்.