நமது அறம் அறக்கட்டளை மற்றும் CK மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று மொடக்குகுறிச்சி வட்டம், 46 புதூர் பஞ்சாயத்து, பெரிய செட்டிபாளையத்தில் நடைபெற்றது. இம்முகாமை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் துவக்கி வைத்தார். இம்முகாமில் பொது மருத்துவம் மற்றும் கண் மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள், சிகிச்சைகள், ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை மற்றும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இம்முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


