சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் பகுதியில் அறம் அறக்கட்டளை மற்றும் CK மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாமை நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் துவக்கி வைத்தார். இம்முகாமில் பொது மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சைகள், சர்க்கரை பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.


