[give_form id="1787"]
Follow us

அறம் & CK மெடிக்கல் சென்டர், மருத்துவ முகாம்.

அறம் & CK மெடிக்கல் சென்டர், மருத்துவ முகாம்.

அறம் அறக்கட்டளை மற்றும் சி.கே. மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிட்டல் இணைந்து மொடக்குறிச்சி பகுதி மக்களுக்காக நடத்தப்பட்ட மாபெரும் எலும்பு முறிவு மற்றும் மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமில் நான் கலந்து கொண்டு மருத்துவ முகாமை பார்வையிட்டேன். சி.கே. மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் டாக்டர்.தினேஷ் (எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர்) மற்றும் டாக்டர். சனுப் குமார் செரின் சபு (பொதுநலம் மற்றும் சர்க்கரை நோய் மருத்துவர்) ஆகியோர் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்கள்.

முகாமில் கலந்த கொண்டவர்களுக்கு எக்ஸ்ரே இலவசமாக எடுக்கப்பட்டது. மருத்துவ ஆலோசனை பெற்றவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.இந்த மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர்.