நமது அறம் அறக்கட்டளை, சி.கே மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் இணைந்து மொடக்குறிச்சி தொகுதி சிவகிரி பகுதி மக்களுக்காக நடத்தப்பட்ட மாபெரும் எலும்பு முறிவு மற்றும் தண்டுவட இலவச சிறப்பு மருத்துவ முகாம். இவ்முகாமில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தேன்.இந்த முகாமில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். சி.கே. மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர்.தினேஷ் MS Ortho மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்.
முகாமில் கலந்த கொண்டவர்களுக்கு எக்ஸ்ரே இலவசமாக எடுக்கப்பட்டது. மருத்துவ ஆலோசனை பெற்றவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.இந்த மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவ ஆலோசனை பெற்றனர்.