ஈரோடு மக்களுக்காக Arram Jobs (அறம் – வேலை வாய்ப்பு) துவக்க விழா : அறம் அறக்கட்டளையின் மேலும் ஒரு அங்கமாக (Arram Jobs) அறம் வேலைவாய்ப்பு துவங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடும் நபர்களுக்கு தகுந்த வேலையை அமைத்துக் கொடுப்பதற்காக இந்த சேவையை முற்றிலும் இலவசமாக துவங்கி உள்ளோம்.
அறம் வேலைவாய்ப்பின் முதல் மைல் கல்லாக துவங்கப்பட்ட இரண்டே மாதங்களில் 25 நபர்களுக்கு தங்களுக்கு ஏற்ற துறையில் வேலையை பெற்றுள்ளனர். இதில் நானும் அறம் அறக்கட்டளையின் செயல் தலைவரும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய டாக்டர் சி.சரஸ்வதி அவர்களும் கலந்துகொண்டு தொழில்நெறி வழிகாட்டி சான்றிதழ் வழங்கினோம்.





