[give_form id="1787"]
Follow us

அறம் முகாம்: நலம், நம்பிக்கை, கல்வி, கலை, கைதிறன்

அறம் முகாம்: நலம், நம்பிக்கை, கல்வி, கலை, கைதிறன்

அறம் அறக்கட்டளையின் சார்பில், கொடுமுடி ஒன்றியத்துக்கு உட்பட்ட இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் புத்துணர்வு முகாம் தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. முகாமை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து தன்னார்வலர்களுக்கு மனநல தன்னம்பிக்கை பயிலரங்கம், உடல் நலம் தொடர்பான மருத்துவரின் கருத்தரங்கம் யோகா,ஓவியம்,புகைப்பட தொழில் நுட்பங்கள், கைவினைப் நுட்பங்கள், விளையாட்டு போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் சுமார் 150 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.