மொடக்குறிச்சியில் அறம் அறக்கட்டளை சார்பில் மக்கள் மருத்துவமனை மற்றும் மக்கள் மருந்தகம் துவக்க விழா நடைபெற்றது. அறம் மக்கள் மருத்துவமனையை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி எம்.எல்.ஏ அவர்கள் துவக்கி வைத்தார். அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் கிருத்திகா ஷிவ்குமார் அவர்கள் வரவேற்றார். நிகழ்ச்சியில் இந்தியன் பப்ளிக் பள்ளியின் நிர்வாக இயக்குனர் டாக்டர்.ஷிவ் குமார் சின்னுசாமி அவர்கள், பாஜக மாவட்டத் தலைவர் திரு. வேதானந்தம் அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



