ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, கணபதி பாளையம் நால்ரோடு அருகில் அறம் அறக்கட்டளை சார்பாக “அறம் மக்கள் உணவகம்” இன்று 22.05.2023 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இனிதே துவங்கப்பட்டது. இவ்விழாவில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள், அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் திருமதி. கிருத்திகா சிவ்குமார் அவர்கள், தி இந்தியன் பப்ளிக் பள்ளியின் நிர்வாக இயக்குனரும் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்டு டேபிள் 211 சேர்மனுமாகிய டாக்டர்.சிவ்குமார் சின்னுசாமி அவர்கள் மற்றும் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.








