அறம் அறக்கட்டளை சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று கொடுமுடி வட்டம், பாசூரில் நடைபெற்றது. இம்முகாமில் பொது மருத்துவம், கண் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள், சிகிச்சைகள், ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை மற்றும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இம்முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



